சச்சின்,சேவாக் சாதனையை சமன்செய்த கோலி..!

PARIS TAMIL  PARIS TAMIL
சச்சின்,சேவாக் சாதனையை சமன்செய்த கோலி..!

இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தலைவர் விராட் கோலி இரட்டை சதம் அடித்துள்ளார். 
 
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கேட் வீரர்களான சச்சின் மற்றும் சேவாக் 6 முறை இரட்டை சதம் அடித்தனர். இதனையடுத்து சச்சின், சேவாக் சாதனையை விராட் கோஹ்லி இன்றைய நாளில் சமன் செய்துள்ளார்.
 
டெஸ்ட் போட்டியில் 6 முறை இரட்டை சதம் அடித்துள்ள 3-வது இந்திய வீரர் விராட் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.
 
இலங்கை அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் கோஹ்லியின்  2-வது இரட்டை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கோஹ்லியின் 6 இரட்டை சதங்களும் கடந்த 17 மாதங்களில் பெறப்பட்டுள்ளன.

மூலக்கதை