வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை: அமெரிக்கா கடும் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை: அமெரிக்கா கடும் எச்சரிக்கை

வாஷிங்டன், நவ. 29- : வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வடகொரியா நேற்று நள்ளிரவு மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய ஏவுகணை, ஜப்பான் கடல் பகுதியில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதியன்றுதான் வடகொரியா அணு ஆயுத சோதனையை நடத்தியது.

2 மாத இைடவெளியில் மீண்டும் சோதனை நடத்தியது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ஐநா சபை ஆகியவை பலமுறை எச்சரித்தும், பொருளாதாரத்தடை விதித்தும் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் மீண்டும் மீண்டும் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே வடகொரியாவை கடுமையாக எச்சரித்திருந்தார்.

போர் தொடுக்கவும் தயங்கமாட்டோம் என்றார். இதற்கு பதிலடியாக அமெரிக்கா மீது போர் தொடுப்போம் என வடகொரியா எச்சரிக்கை விடுத்தது. இந்த சூழலில் மீண்டும் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியது உள்ள நாடுகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், வடகொரியா மீது உரிய நடவடிக்கப்படும் என டிரம்ப் கூறியுள்ளார். வடகொரியாவின் எதிரி நாடான தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இருநாட்டு படைகளும் ஏற்கனவே போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.





.

மூலக்கதை