ஆஸ்திரேலியா அருகே நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலியா அருகே நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

சிட்னி: ஆஸ்திரேலியாவை ஒட்டிய நியூ கலேடோனியா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 7. 0 ஆக பதிவு ஆகியுள்ளது.

சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுளளது. ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடல் பகுதியில் உள்ள நியூ கலேடோனியா அருகே தெற்கு பசிபிக் கடல் பகுதியில் லாயல்டி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 7. 0 ஆக பதிவாகியுள்ளது. இதனால் நியூ கலேடோனியா மற்றும் அருகிலுள்ள வனுவாட்டு பகுதிகளை நோக்கி சிறிய அளவிலான சுனாமி ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்க பகுதியில் இருந்து 300 கி. மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அலைகள் அதிக உயரத்திற்கு செல்லும் அளவை விட கூடுதலாக ஒரு மீட்டர் உயரத்திற்கு சென்றுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

.

மூலக்கதை