திருப்பூரில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஜெயித்துக்காட்ட வாங்க!மாணவ, மாணவியரே, "மிஸ் பண்ணிடாதீங்க'

தினமலர்  தினமலர்
திருப்பூரில் இன்று கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி ஜெயித்துக்காட்ட வாங்க!மாணவ, மாணவியரே, மிஸ் பண்ணிடாதீங்க

திருப்பூர்;பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியரின் கல்வி முன்னேற்றத்துக்காக, டி.வி.ஆர்., அகாடமி, "தினமலர்' சார்பில், "ஜெயித்துக்காட்டுவோம்' நிகழ்ச்சி, திருப்பூரில் இன்று துவங்குகிறது.
மாணவர்களின் கல்வி நலனில் எப்போதும் தனி அக்கறை கொண்டிருக்கும் "தினமலர்' நாளிதழ், 17 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியர்க்கு, "ஜெயித்துக்காட்டுவோம்' என்ற தன்னம்பிக்கையூட்டும், வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில், பங்கேற்று லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் பயன்பெற்றுள்ளனர்.

இந்தாண்டு "ஜெயித்துக்காட்டுவோம்' நிகழ்ச்சி, திருப்பூர், தாராபுரம் ரோடு, வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் இன்று துவங்குகிறது. காலை, 09:00 மணிக்கு தமிழ் வழியில் கல்வி பயிலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கோவை, பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளி மற்றும் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆலோனை மற்றும் முக்கிய குறிப்புகளை வழங்குகின்றனர்.

நிகழ்ச்சியில் பங் கேற்று ஆலோசனை வழங்கும் ஆசிரியர் விவரம்:இன்று, காலை, 9:00 மணிக்கு, கல்பனா (தமிழ்), மெகர்நிசா (ஆங்கிலம்), சசிகலா (கணிதம்) குணராஜசேகரன் (அறிவியல்), மஞ்சுளா (சமூக அறிவியல்) அறிவுரை தருகின்றனர்.மதியம், 01:00 மணிக்கு, ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, கல்பனா (தமிழ்) ராதிகா (ஆங்கிலம்) தினேஷ்குமார் (கணிதம்) பிரியா (அறிவியல்-1) பரிமளம் (அறிவியல்-2), லீனா

(சமூக அறிவியல்).பொதுத்தேர்வை பயமின்றி, அதிக மதிப்பெண் பெறும் வகையில் சந்திப்பது குறித்து அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள்அறிவுரைகளை வழங்குகின்றனர். எப்படி, என்ன பாடத்தை, எவ்வாறு படித்தால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறலாம். பள்ளி படிப்புக்கு பின் போட்டி தேர்வை எதிர்கொள்வது எப்படி? பத்தாம் வகுப்பு பொதுப் பாடத்திட்டத்தில் "முக்கியத்துவம்' தர வேண்டிய பகுதி எவை? என விளக்கப்படுகிறது.

மேலும், பொதுத்தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற முக்கிய வினாக்கள் எவை? படித்ததை நினைவில் கொள்வது எப்படி? பயமின்றி தேர்வை சந்தித்து, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது குறித்து நிகழ்ச்சியில் விரிவாக விளக்கம் அளிக்கப்படுகிறது.


குறித்த நேரத்தில் நிகழ்ச்சி துவங்கும் என்பதால், மாணவ, மாணவியர் தங்கள் பள்ளி சீருடையுடன் பங்கேற்பது அவசியம். ஆர்வமுள்ள பெற்றோரும் பங்கேற்கலாம். நிகழ்ச்சியில், முக்கிய வினாக்கள் அடங்கிய "ப்ளூ பிரின்ட்' புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.


நாளை பிளஸ் 2 மாணவர்களுக்குநாளை (26 ம் தேதி) காலை, 9:00 மணி முதல், பிளஸ் 2 "ஆர்ட்ஸ் பிரிவு' மாணவர்களுக்கும், மதியம் "சயின்ஸ் பிரிவு', மாணவர்களுக்கும் கோவை பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளி மற்றும் வடகோவை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கல்வி ஆலோசனைகளை வழங்குகின்றனர். எனவே, இன்றும், நாளையும், தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் தவறாமல் பங்கேற்று, தேர்வில் அதிக மதிப்பெண் பெற, "தினமலர்' நாளிதழ் அன்புடன் அழைக்கிறது.

மூலக்கதை