சொகுசு கார் வரி ஏய்ப்பு அமலாபால் மீது வழக்குப் பதிவு

தினகரன்  தினகரன்

திருவனந்தபுரம் : சொகுசு காரை புதுச்சேரியில் போலி முகவரியில் பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக நடிகை அமலா பால், நடிகர் பகத் பாசில் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரபல  நடிகை அமலா பால், நடிகர் பகத் பாசில், சுரேஷ் கோபி எம்.பி. ஆகியோர்  புதுச்சேரியில் தங்கி வசிப்பதாக போலி வீட்டு வாடகை ரசீதை கொடுத்து தங்களின் சொகுசு கார்களை பதிவு செய்து சிக்கியுள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கடந்த  23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக, எர்ணாகுளம் குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ்  அனுப்பினர். ஆனால், ஆஜராகவில்லை. இதையடுத்து, எர்ணாகுளம் குற்றப்பிரிவு ஐஜி ஜித்  உத்தரவின்பேரில் அமலாபால், பகத் பாசில் மீது போலீசார்  ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின்கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.இதற்கிடையே, பகத் பாசில் சில தினங்களுக்கு முன் ரூ.17.68 லட்சம் ெசலுத்தி  தனது காரை ஆலப்புழாவில் மறுபதிவு செய்தார். இருப்பினும், புதுச்சேரியில் வாகனத்தை  பதிவு செய்ய போலி ஆவணம் தாக்கல் செய்ததால் அவர் மீது வழக்குப்பதிவு  செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.ரூ.500 கோடி வரி ஏய்ப்பு: புதுச்சேரியில்  பதிவு செய்த 1,500 வாகனங்கள் கேரளாவில் ஓடுவது தெரிய வந்துள்ளது. இதன்மூலம்,  கேரள அரசுக்கு ரூ.500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கேரள போக்குவரத்து அதிகாரிகள்  முடிவு செய்துள்ளனர்.

மூலக்கதை