அநியாயம் என மத்திய அரசு கருத்து இந்தியாவின் தர குறியீட்டை மாற்ற ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் மறுப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் (எஸ் அண்ட் பி) நிறுவனம், இந்தியாவின் தர குறியீட்டை மாற்ற மறுத்து விட்டது. இது, மத்திய அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சமீபத்தில் சர்வதேச தரச்சான்று நிறுவனமான மூடிஸ், இந்தியா மீதான மதிப்பீட்டை உயர்த்தியது. மத்திய அரசு மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளால் மதிப்பீடு பிஏஏ2-வுக்கு உயர்ந்துள்ளதாக கூறியது.முன்பு பிஏஏ3 என்ற நிலையில் இந்தியா இருந்தது. அதாவது சாதகமான சூழல் என்றிருந்த நிலையிலிருந்து இப்போது ஸ்திரமான சூழல் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்பு 2004ம் ஆண்டில் மூடிஸ் நிறுவனம் இந்தியாவின் தரச்சான்று குறியீட்டை பிஏஏ3 என நிர்ணயித்தது. அப்போது, வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. தற்போது 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பாஜ ஆட்சியில் மதிப்பீடு உயர்ந்துள்ளது.  இந்த பின்னணியில் மற்ெறாரு தர நிர்ணய நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்ட் பூர், மூடிசை போன்று சாதகமான  மதிப்பீட்டை தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் தர குறியீடு ‘பிபிபி மைனஸ் -’ என குறிப்பிட்டுள்ளது.     ‘‘இந்த மதிப்பீடு நியாயமற்றது’’ என மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. மத்திய பொருளாதார விவகார செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் கூறுகையில், ‘‘ அடுத்த மதிப்பீட்டின்போது கவனத்தில் கொண்டு, தர குறியீட்டை அதை உயர்த்தும்’’ என நம்பிக்கை தெரிவித்தார். மதிப்பீடு செய்வது எப்படி?சர்வதேச அளவிலான தரச்சான்று நிறுவனங்களில் ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் (எஸ் அண்ட் பி), மூடிஸ் மற்றும் ஃபிட்ச் ஆகியவை மிகவும் பிரபலமானவை. இவை கடன் பெற்ற நிறுவனங்கள் மற்றும் அரசுகளின் திரும்ப செலுத்தும் திறனை கணித்து அவற்றுக்கு மதிப்பீடு அளிக்கும். இவ்விதம் மதிப்பீடு செய்வதில் பிற நிறுவனங்கள் இருந்தாலும் 95 சதவீத சந்தையை இந்த மூன்று நிறுவனங்களே வைத்துள்ளன. நிதி நிலை, வளர்ச்சிக்காக வகுக்கப்படும் உத்திகள், அதனால் ஏற்படும் மாற்றங்கள் போன்வற்றை இவை ஆய்வு செய்து மதிப்பீடு வழங்கும்.

மூலக்கதை