திருப்பதி கோயிலில் திருமணம்: காதலரை மணந்தார் நமீதா

தினகரன்  தினகரன்

திருமலை: தமிழ்ப்பட உலகில் பிரபல கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த இவர், 15 வயதிலேயே சூரத் அழகியாக தேர்வானவர். 2002ம் ஆண்டு ‘சொந்தம்’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 2004ல் விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். நமீதாவுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.‘‘மச்சான்ஸ்’’ என்று இவர் அழைக்கும்போது ரசிகர்கள் உற்சாகமடைந்து வந்தனர். மலையாளம். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.  `மியா’  படத்தில் நடித்தபோது நமீதாவுக்கும் கதாநாயகன் வீரேந்திர சவுத்ரிக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு இருவரது பெற்றோர்களும் சம்மதித்தனர்.  இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள இஸ்கான் (தாமரை கோயில்) கிருஷ்ணர் கோயிலில் நேற்று காலை திருமணம் நடைபெற்றது. இதில் நடிகர் சரத்குமார், அவரது மனைவி நடிகை ராதிகா, கணேஷ், ஆர்த்தி, காயத்ரி ரகுராம், சக்தி, ஹரிஸ் கல்யாண் உட்பட ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ‘தொடர்ந்து நடிப்பேன்’: திருமணத்துக்கு பின் நடிகை நமீதா அளித்த பேட்டியில், ‘`உங்களின் அன்பு, ஆதரவு, ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டும். என்னுடைய மச்சான்களான ரசிகர்கள் மீது எனக்குள்ள அன்பு அப்படியேதான் உள்ளது. என்னை புரிந்து கொண்ட கணவர் கிடைத்துள்ளார். எனவே, தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பேன்’’ என்றார்.

மூலக்கதை