பிரச்னைகளுக்கு தீர்வு காண போலீசிடமோ கோர்ட்டிலோ முறையிட 72 சதவீத மக்கள் விரும்பவில்லை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: பிரச்னைகளுக்கு தீர்வு காண போலீசிடமோ, வக்கீலிடமோ செல்ல 72 சதவீத மக்கள் விரும்பவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. சட்டம் மற்றும் நீதி தொடர்பான ஆய்யை பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் ஒன்று நடத்தியது. நாடு முழுவதும் உள்ள 24 ஐகோர்ட்களின் நீதிபரிபாலனத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் பேரிடம் சர்வே நடத்தப்படட்து. இது குறித்து முடிவுகளை அந்த நிறுவனம் வெளியிட்டது. அதில் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு சுமார் 40 சதவீதம் மக்கள் காவல்துறையை அணுக விரும்பவில்லை என்றுதெரிவித்துள்ளனர்.மேலும் 32 சதவீதம் பேர் வக்கீலை அணுகி சட்ட ரீதியாக தீர்த்துக் கொள்ளவும், 22 சதவீதம் பேர் ஊர் தலைவர் அல்லது உள்ளுர் அரசியல் வாதிகளை அணுக அச்சம் தெரிவித்துள்ளனர்.74 சதவீதம் பேர் தங்களத சொத்து மற்றும் பல்வேறு பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை அணுகி காவல் மற்றும் நீதித்துறை அல்லாத மாற்று வழியில் பேச்சு வார்த்தை மூலமாகவே தீர்த்துக் கொள்ளவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சொத்து தொடர்பாக எழும் சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள அவர்கள் விரும்பவில்லை என்றும் கூறுகின்றனர். அதே போல் நீதிமன்றத்தில் தங்களது விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கு 42 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்க தயாராக  இருப்பதாக தெரிவித்துள்ளனர்.அதே போல் தங்களது பிரச்னையை தீர்த்துக் கொள்ள 58 சதவீதம் லஞ்சம் கொடுத்து காரியத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். 12 ஐகோர்ட்களில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகளில் சுமார் 91 ஆயிரத்திற்கும் விசாரணை தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  நீதிபதிகள் பற்றாக்குறை, வக்கீல் கிடைக்காதது, சாட்சிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் தங்களது வழக்குகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், நீதிமன்றத்திற்கு அலைவதால் தங்களது காலம் மற்றும் பணம் வீணடிக்கப்படுவதாகவும் நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை