27ம் தேதி குஜராத்தில் மோடி பிரசாரம்

தினகரன்  தினகரன்

அகமதாபாத்: குஜராத்தில் சட்ட பேரவை தேர்தலை முன்னிட்டு வருகிற 27ம் தேதி பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். குஜராத்தில் டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்ட பேரவை தேர்தல் வாக்கு பதிவு நடைபெறுகிறது. அங்கு ஆளும் பாஜவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த தேர்தல் வருகிற லோக்சபா தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் இரண்டு கட்சிகளும் களத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. இதையொட்டி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரதமர் மோடி வருகிற 27ம் தேதியும் 29ம் தேதி தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார். ஏற்கனவே பாஜ தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் பாஜ தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாஜ பொறுப்பாளர் புபேந்தர் யாதவ் கூறுகையில், முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் பிரதமர் மோடி வருகிற 27 மற்றும் 29ம் தேதிகளில் பாஜவுக்கு வாக்கு சேகரிக்க 8 பொது கூட்டங்களில் பேசுகிறார். அதே போல் 26 மற்றும் 27ம் தேதிகளில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, அருண் ஜெட்லி, சுஷ்மா, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா உள்ளிட்ட பாஜ தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர் என்றார்.

மூலக்கதை