‘விஜய் சங்கர் நிச்சயம் தேவை’

தினகரன்  தினகரன்

தமிழக வீரர் விஜய் சங்கர் நீண்ட இடைவெளிக்கு அணியில் இடம் பெற்றுள்ளார். அவரைப் பற்றி கேப்டன் கோஹ்லி நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், ‘‘விஜய் சங்கரின் திறமையை வலைப்பயிற்சியில் பார்த்துள்ளேன். மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர். இவரை, ஹர்திக் பாண்டியா போல ஆல்ரவுண்டராக பார்க்கிறோம். இவருக்கு நிச்சயம் வெளிநாட்டு தொடர்களில் வாய்ப்பு வழங்குவோம். விஜய் சங்கர் போல ஆல்ரவுண்டர் நிச்சயம் அணிக்கு தேவை. அவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன்’’ என்றார். இதனால் விஜய் சங்கருக்கு தென் ஆப்ரிக்கா தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை