டோனி திடீர் காஷ்மீர் பயணம்

தினகரன்  தினகரன்

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன்\r மகேந்திர சிங் டோனி, டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதால், \r இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கவில்லை. இந்த ஓய்வு நேரத்தில் அவர் \r காஷ்மீரில் உள்ள ராணுவ பள்ளிக்கு திடீரென சென்று அப்பள்ளி மாணவர்களுக்கு \r இன்ப அதிர்ச்சி தந்துள்ளார். மாணவர்கள் டோனியுடன் ஆர்வமாக புகைப்படங்களை \r எடுத்துக் கொண்டனர். மாணவர்களிடம் பேசிய டோனி, விளையாட்டுக்கும், \r படிப்புக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து வாழ்வில் முன்னேற வேண்டுமென \r அறிவுரை வழங்கினார். டோனிக்கு, கவுரவ ராணுவ லெப்டினன்ட் பதவி \r வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை