ஆஷஸ் முதல் டெஸ்ட் இங்கிலாந்து நிதான துவக்கம்

தினகரன்  தினகரன்

பிரிஸ்பேன் : ஆஷஸ் முதல் டெஸ்டின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களுடன் உள்ளது.இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. ஸ்டார்க்கின் வேகத்தில் அலஸர் குக் 2 ரன்னில் வெளியேறினார். ஆனாலும், ஸ்டோன்மேன், வின்ஸ் இருவரும் நிதானமாகவும், பொறுப்புடனும் ஆடி அணியை மீட்டனர்.இருவரும் அரைசதம் அடித்த நிலையில், ஸ்டோன்மேன் (53) கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வின்ஸ் (83 ரன்) துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த ரூட் 15 ரன்னில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்களுடன் உள்ளது. மாலன் 28, மொயீன் அலி 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை