இல்-து-பிரான்ஸ் - எதிர்பாரா அளவு அதிகரித்த சுற்றுலாப்பயணிகளின் வரவு!!

PARIS TAMIL  PARIS TAMIL
இல்துபிரான்ஸ்  எதிர்பாரா அளவு அதிகரித்த சுற்றுலாப்பயணிகளின் வரவு!!

இந்த வருட கோடை காலத்தில், பரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்கு எதிர்பாரா அளவு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
INSEE நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 2017 ஆம் ஆண்டு கோடை காலத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை) பரிசுக்கும், இல்-து-பிரான்ஸ் மாகாணத்துக்கும் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்ததாக பதிவாகியுள்ளது இதனால் சுற்றுலாத்தலங்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், தங்குமிட விடுதிகள், உணவகங்கள் அதிகளவு வருவாயை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியை விட 12.7 வீதத்தால் இல்-து-பிரான்சுக்குள்ளும், பிரான்ஸ் முழுவதும் 6.1 வீதத்தாலும் பயணிகளின் வருகை அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தங்குமிடங்களின் உணவங்களை தேர்ந்தெடுக்காமல், பயணிகள் தனிநபர் தங்குமிடங்களையும், சுற்றுலா வீடுகளையும், அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கும் அதிகளவாக பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் வருகையும், உள்நாட்டு பயணிகளின் வருகையும் இல்-து-பிரான்சுக்குள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை