Société Générale வங்கிக்கு எதிராக வழக்கு தொடரும் மரீன்-லு-பென்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Société Générale வங்கிக்கு எதிராக வழக்கு தொடரும் மரீன்லுபென்!!

தேசிய முன்னணி கட்சியின் அனைத்து வங்கி கணக்குகளையும் மூடவேண்டும் என Société Générale வங்கி தெரிவித்ததாக நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் வங்கியினர் 'பாகுபாடு' பார்க்கின்றனர் எனவும், Société Générale, மற்றும் HSBC வங்கிகளுக்கு எதிராக தாம் வழக்கு தொடர உள்ளதாகவும் மரீன்-லூ-பென் தெரிவித்துள்ளார். 
 
அவர் தெரிவிக்கும் போது, 'இது இடையூறு செய்யும் முயற்சியாகும் - நாம் கட்டாயமாக தேசிய முன்னணி கட்சி சார்பாக Société Générale, மற்றும் HSBC வங்கிகளுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளோம். நான் கடந்த 25 வருடங்களாக HSBC வங்கியில் தனிப்பட்ட கணக்கு வைத்திருக்கிறேன். அதை மூட இருப்பதாக நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளார்கள். இந்த பாகுபாடுகளுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளோம்!' என மரீன்-லூ-பென் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 
 
அதேவேகை, Société Générale மேலாளர் இது குறித்து அறிவித்ததில், 'கணக்குகளை மூடுவதற்கு சில வாடிக்கையாளர்களுடனான தனிப்பட்ட காரணங்கள் மாத்திரே உள்ளன. அரசியல் அளவுகோல்கள் எதுவும் இதில் இல்லை!' என குறிப்பிட்டுள்ளார்கள்.

மூலக்கதை