ஆஷஸ் முதல் டெஸ்ட்: இங்கிலாந்து நிதான ஆட்டம்

தினகரன்  தினகரன்

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் கொண்ட ஆஷஸ்  தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோரூட், பேட்டிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி குக், ஸ்டோன்மான், வின்சி, ஜோ ரூட், மலன், மொயின் அலி, பேர்ஸ்டோ, வோக்ஸ், பிராட், ஜேக்பால், ஆண்டர்சன் ஆகியோர் இடம் பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் வார்னர், பான்கிராப்ட், கவாஜா, ஸ்மித், ஹேண்ட்கோம், ஷான்மார்ஷ், டிம்பெய்ன், ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட், நாதன் லயன் ஆகியோர் களம் இறங்கினர். ஆட்டத்தின் 3வது ஓவரிலேயே ஸ்டார்க் பந்தில் குக் 2 ரன்னில் கேட்ச் ஆனார். இதையடுத்து ஸ்ேடான்மானுடன் வின்சி ஜோடி சேர்ந்தார். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 59 ரன் எடுத்திருந்தது.

மூலக்கதை