எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் அணிக்கே இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையம் அதிகார பூர்வ அறிவிப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
எடப்பாடி பழனிசாமிஓ.பன்னீர் செல்வம் அணிக்கே இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையம் அதிகார பூர்வ அறிவிப்பு

இன்று இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்ளத் தடை இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் 83 பக்கங்கள் கொண்ட  இறுதி உத்தரவை தேர்தல் ஆணையம் அதிகார பூர்வ உத்தரவை பிறப்பித்து உள்ளது. 

முதல்வர் பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு.  முதலமைச்சர் பழனிச்சாமி அணிக்கு பெரும்பான்மை உள்ளதால் சின்னம் ஒதுக்கீடு  செய்யப்பட்டு உள்ளது. அதிமுக என்ற பெயரை பழனிச்சாமி, பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்தவும் அனுமதி அளித்து அதிகார பூர்வமாக உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இரட்டை இலையை முடக்கி மார்ச் 22ல் பிறப்பித்த உத்தரவை திரும்பபெறுகிறோம். பெரும்பாலான எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் முதலமைச்சர் அணிக்கு ஆதரவு தெரிவித்ததால், சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் அணிக்கு 111 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. தினகரன் அணிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் உட்பட 20 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது.

மூலக்கதை