SNCF - 150 மில்லியன் யூரோக்களில் பயணிகளுக்கு புதிய வசதிகள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
SNCF  150 மில்லியன் யூரோக்களில் பயணிகளுக்கு புதிய வசதிகள்!!

நேற்று புதன்கிழமை இரவு, போக்குவரத்து துறை அமைச்சர் Elisabeth Borne, SNCF தொடர்பாக பல புதிய தகவல்களை வழங்கியுள்ளார். 150 மில்லியன் யூரோக்கள் செலவில் புதிய தகவல் தொடர்பாடல் தொடர்பான வசதிகளை ஏற்படுத்தி தர உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
இவ்வருட கோடை காலத்தில் Montparnasse தொடரூந்து நிலையத்தில் மிகப்பெரும் இடையூறு ஏற்பட்டிருந்தது வாசகர்கள் அறிந்ததே. தொடர்ச்சியான நான்கு நாட்கள் பயணிகளுக்காக பயண நேரத்தில் தாமதங்களும், நேர மாற்றங்களும் ஏற்பட்டு பெரும் இடையூறுகள் ஏற்பட்டதோடு, பயணிகள் Montparnasse நிலையத்தில் தொடரூந்துக்காக காத்திருந்த காட்சிகள் பல இணையத்தில் பரவியிருந்தன. இந்நிலையில் SNCF அதிகாரி Guillaume Pépy உடன் சந்திப்பு நிகழ்த்திய போக்குவரத்துதுறை அமைச்சர் இதனை தெரிவித்தார். '2020 ஆம் ஆண்டில், பயணிகளுக்கு போக்குவரத்து தொடர்பான மேம்பாடுகளுக்கு 150 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.  
 
அதேவேளை, வரும் 2018 ஆம் ஆண்டுமுதல் மேம்படுத்தப்பட்ட தொலைபேசி செயலியும் (App) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து தாமதங்கள் தொடர்பாக உடனுக்குடன் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளுக்கு பயனளிக்கக்கூடிய பல்வேறு தகவல்கள் இந்த செயலியில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை