பிசிசிஐ சரியாக திட்டமிடாததால் வீரர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்படுகிறது : விராட்கோலி

தினகரன்  தினகரன்

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்துக்கு கேப்டன் விராட்கோலி கண்டனம் தெரிவித்துள்ளார். பிசிசிஐ சரியாக திட்டமிடாததால் வீரர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்படுவதாக விராட்கோலி குற்றம் சாட்டியுள்ளார். ஓய்வில்லாமல் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிக்கு திட்டமிட்டது குறித்து கோலி இவ்வாறு தெரிவித்துள்ளார். சமீப காலமாக இந்திய அணி தொடர்ச்சியாக விளையாடி வருகிறது. அதாவது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் 2 டி20 போட்டி தொடரில் பங்கு பெற்றது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி 3 ஒரு நாள், மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் பங்கு பெற்றது. இந்நிலையில் இலங்கை அணி இந்தியாவுடன் 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் டிசம்பர் 24-ம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக இந்திய அணி விளையாடி வருகிறது.  இது தொடர்பாக பிசிசிஐ சரியாக திட்டமிடாததால் வீரர்களின் விளையாட்டு திறன் பாதிக்கப்படுவதாக விராட்கோலி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை