கோஹ்லியிடம், டிக்வெல்ல வம்பிழுத்தது ஏன்?

PARIS TAMIL  PARIS TAMIL
கோஹ்லியிடம், டிக்வெல்ல வம்பிழுத்தது ஏன்?

இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமி ஆகியோரிடம் வம்பிழுத்தது ஏன் என்ற காரணத்தை இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் நிரேஷன் டிக்வெல்ல கூறியுள்ளார்.
 
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. இந்நிலையில் எஞ்சியுள்ள கடைசி சில மணி நேரங்களை கடத்த இலங்கையின் டிக்வெல்ல நடு களத்தில் துடுப்பாட்டம் செய்ய தயாராகவில்லை என அடுத்ததடுத்து சொல்ல பந்துவீச்சாளர் ஷமி கோபமடைந்தார். இதே போல தொடர்ந்து செய்ய இந்திய அணி தலைவர் கோஹ்லி ஆத்திரமடைந்தார். இதனால் டிக்வெல்ல, கோஹ்லி, சந்திமால் ஆகியோரை அழைத்து நடுவர்கள் பேசினர்.
 
இதுகுறித்து டிக்வெல்ல கூறுகையில்,”நான் சிக்சர் அடித்த போது இடது புறத்தில் வெறும் 3 களத்தடுப்பாளர்கள் மட்டும் இருந்ததால் அதை நடுவரிடம் தெரிவித்தேன்
 
அப்போது என்னிடம் தானாக வந்த கோஹ்லி அது நடுவர் வேலை எனது வேலையில்லை என்றார். இது தான் நேரத்தை கடத்த சரியான வாய்ப்பு என அவருடன் வம்பிழுத்தேன். ஷமியும் இதில் சேர்ந்து கொண்டார்.
 
இந்த சம்பவத்தால் இந்திய அணி 3 அல்லது 4 ஓவர்கள் கூடுதலாக வீச முடியாமல் போனது. அது எங்களுக்கு லாபமாக அமைந்தது” என கூறியுள்ளார்.

மூலக்கதை