வெற்றி முனைப்பில் சென்னையின் எப்சி!

தினகரன்  தினகரன்

சென்னை : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இன்று நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணியுடன் மோதுகிறது. முதல் லீக் ஆட்டத்தில், எப்சி கோவா அணியிடம் 2-3 என்ற கோல் கணக்கில் போராடி தோற்ற சென்னையின் எப்சி அணி, இன்று நார்த்ஈஸ்ட் யுனைட்டட் அணியை சந்திக்கிறது. கடந்த 3 சீசனிலும் நார்த்ஈஸ்ட் அணி சென்னை நேரு ஸ்டேடியத்தில் தோல்வியை சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘முதல் போட்டியில் செய்த தவறுகளை சரி செய்து சிறப்பாக விளையாடுவதுடன் முதல் வெற்றியை சொந்த மண்ணில் பதிவு செய்ய முயற்சிப்போம்’ என்று சென்னை அணி பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறியுள்ளார்.

மூலக்கதை