ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் 2வது சுற்றில் சாய்னா, சிந்து : பாருபள்ளி காஷ்யப் ஏமாற்றம்

தினகரன்  தினகரன்

ஹாங்காங் : பிரபல சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரான ஹாங்காங் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகள் சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து தகுதி பெற்றனர். முதல் சுற்றில் டென்மார்க்கின் மெட்டே பவுல்செனுடன் நேற்று மோதிய சாய்னா 21-19, 23-21 என்ற நேர் செட்களில் கடுமையாகப் போராடி வென்றார். மற்றொரு முதல் சுற்றில் பி.வி.சிந்து 21-18, 21-10 என்ற நேர் செட்களில் உள்ளூர் வீராங்கனை லியுங் யுவெட் யீயை வீழ்த்தினார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் 19-21, 21-17, 21-15 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் ஹு யுன்னை வென்றார். மற்றொரு முதல் சுற்றில் லி டாங் கியுனுடன் மோதிய பாருபள்ளி காஷ்யப் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். சவுரவ் வர்மா 15-21, 8-21 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் டாமி சுகியர்டோவிடம் தோல்வியடைந்தார். மற்றொரு இந்திய வீரர் சாய் பிரனீத்தும் முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றமளித்தார். மகளிர் இரட்டையர் பிரிவில் களமிறங்கிய அஷ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடியும் 11-21, 21-19, 19-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹுவாங் டாங்பிங் - லி வென்மெய் ஜோடியிடம் தோற்றது.

மூலக்கதை