உலக மகளிர் யூத் பாக்சிங் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் உறுதி

தினகரன்  தினகரன்

கவுகாத்தி : உலக மகளிர் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 5 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் கால் இறுதி ஆட்டங்களில் நேற்று களமிறங்கிய 5 இந்திய வீராங்கனைகள் அபாரமாக வென்று அரை இறுதிக்கு முன்னேறினர். இத்தாலியின் ஜியோவன்னா மார்செஸ் உடன் மோதிய ஜோதி குலியா (51 கிலோ) முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியை வசப்படுத்தினார். ஷஷி சோப்ரா (57 கிலோ) தனது கால் இறுதியில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் சந்துகஷ் அபில்கானை வீழ்த்தினார். அங்குஷிதா போரோ (64 கிலோ), நேஹா யாதவ் (+81 கிலோ), அனுபமா (81 கிலோ) ஆகியோரும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர். இதனால் இந்திய அணிக்கு 5 வெண்கலப் பதக்கங்கள் உறுதியாகி உள்ளது. அரை இறுதியில் வென்று பைனலுக்கு முன்னேறினால் வெள்ளிப் பதக்கம் உறுதியாகும். பைனலில் வெற்றியை வசப்படுத்தும் வீராங்கனை தங்கப் பதக்கத்தை தட்டிச் செல்வார்.

மூலக்கதை