கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவர் மூக்கு வரை தான்: எச்.ராஜா

தினமலர்  தினமலர்
கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவர் மூக்கு வரை தான்: எச்.ராஜா

சிவகங்கை: ''கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவர் மூக்கு வரை தான் செல்ல வேண்டும்,'' என பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி.,யால் மாநில உரிமை பறிக்கப்பட்டது என கூறுவது பொருளாதார தற்குறித்தனம். அதில் மத்திய அரசு மட்டும் வரி வசூலிக்கவில்லை. மாநில அரசும் தான் வசூலிக்கிறது.

பத்மாவதி படத்தில் சரித்திரம் திரித்து கூறப்பட்டுள்ளது. பத்மாவதி படத்திற்கு கமல் ஆதரவு தெரிவித்திருப்பது தற்குறியான செயல். கருத்து சுதந்திரம் என்று திரைப்படம், ஊடகங்களில் எதையும் திரித்து கூற முடியாது. அது அடுத்தவர் மூக்கு வரை தான் செல்ல வேண்டும்.

அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. வருமானவரி சோதனையில் மத்திய அரசுக்கும், பா.ஜ.,விற்கும் தொடர்பில்லை. ஏற்கனவே நடந்த வருமானவரி சோதனையின் நடவடிக்கைகள் குறித்து கேட்கும் ஸ்டாலின், 13 ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்ட 2ஜி குறித்து தற்போது தீர்ப்பு வரவுள்ளது. அந்த தீர்ப்பு விரைவாக வரவில்லை என, ஏன் கேள்வி கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை