பிருத்விராஜ் படத்தை ரிலீஸ் செய்யும் ஆசிப் அலி

தினமலர்  தினமலர்
பிருத்விராஜ் படத்தை ரிலீஸ் செய்யும் ஆசிப் அலி

மலையாள சினிமாவில் இளம் நடிகர் ஆசிப் அலிக்கும் நடிகர் பிருத்விராஜுக்கும் இடையேயான நட்பு ஆழமானது. அதனால் தான் தங்களது ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் பைனான்ஸ் செய்த 'சப்தமஸ்ரீ தஸ்கரா, தாங்களே தயாரித்த 'டபுள் பேரல்' மற்றும் 'அனுராக கரிக்கின் வெள்ளம்' ஆகிய படங்களில் தொடர்ந்து ஆசிப் அலியையும் ஒரு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தந்தார் பிருத்விராஜ்.

அதேபோல ஆசிப் அலி, தான் துவங்கிய தயாரிப்பு நிறுவனத்தில் இரண்டாவது தயாரிப்பான 'தி பியூட்டிபுல் கேம்' படத்தில் பிருத்விராஜையே ஹீரோவாக ஒப்பந்தம் செய்துவிட்டார். இப்போது லேட்டஸ்டாக பிருத்விராஜ் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் 'விமானம்' படத்தை வெளியிடும் உரிமையை ஆசிப் அலி வாங்கியுள்ளார்.

மூலக்கதை