திரைப்பட விழாவில் 'செக்ஸி துர்கா'வை திரையிட நீதிமன்றம் உத்தரவு..!

தினமலர்  தினமலர்
திரைப்பட விழாவில் செக்ஸி துர்காவை திரையிட நீதிமன்றம் உத்தரவு..!

மலையாள இயக்குனர் சணல்குமார் சசிதரன் என்பவர் இயக்கியுள்ள 'செக்ஸி துர்கா' என்கிற படத்திற்கு கோவாவில் நடைபெற இருக்கும் IIFI திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட விஷயம் தான் கடந்த சில தினங்களாக ஹாட் டாபிக்காக வலம் வருகிறது. இத்தனைக்கும் இந்தியன் பனோராமாவல் இந்தப்படம் தேர்வு செய்யப்பட்டு, அந்தப்பட்டியல் செய்தி ஒளிபரப்பு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது..

ஆனால் இறுதி செய்யப்பட்ட திரும்பி வந்த பட்டியலில் 'செக்ஸி துர்கா' மற்றும் மராத்திய படமான 'நியூட்' என இரண்டு படங்கள் நீக்கப்பட்டு விட்டன. இதை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் சணல்குமார் சசிதரன். இதை விசாரித்த நீதிமன்றம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'செக்ஸி துர்கா'வை திரையிடுமாறு உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை