இனியும் கந்து வட்டி மரணம் தொடரக்கூடாது : பிரகாஷ் ராஜ்

தினமலர்  தினமலர்
இனியும் கந்து வட்டி மரணம் தொடரக்கூடாது : பிரகாஷ் ராஜ்

தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலைக்கு பிறகு தமிழ் சினிமாவில் கந்து வட்டி பற்றிய அவலக்குரல்கள் ஒலிக்க தொடங்கி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக கோவை வந்த பிரகாஷ் ராஜ், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விபரம் வருமாறு...

எல்லோரும் கடன் வாங்கி தான் படம் எடுக்கிறோம். இருந்தாலும் அவரை சாகும் அளவுக்கு தூண்டியதை ஏற்க முடியாது. இது எல்லோருக்கும் தெரிந்து நடந்த தற்கொலை. தெரியாமல் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எவ்வளவு பேர் வீட்டை இழந்துள்ளார்கள் என்று தெரியவில்லை. சினிமாவில் ஒரு சிலர் சம்பாதிப்பதை பார்த்து பலரும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இங்கு பெரிய சம்பளம் வாங்குபவர்கள் 10 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். கருப்பு பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும். தமிழக திரையுலகில் கந்து வட்டியால் சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளைப் போல் நெருக்கடியான சூழ்நிலைக்குத் தயாரிப்பாளர்களும் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்த் திரையுலகில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இனியும் தமிழகத்தில் கந்து வட்டி மரணம் தொடரக் கூடாது. இந்த விவகாரத்தில் அரசு உதவ வேண்டும்.

ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் கிடையாது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை