தோல், காலணி துறை வளர்ச்சிக்கு ரூ.2,600 கோடி ஊக்க திட்டம்

தினமலர்  தினமலர்
தோல், காலணி துறை வளர்ச்சிக்கு ரூ.2,600 கோடி ஊக்க திட்டம்

புதுடில்லி : மத்­திய அரசு, தோல் மற்­றும் காலணி துறைக்கு, 2,600 கோடி ரூபாய் மதிப்­பி­லான ஊக்­கத் திட்­டத்தை, விரை­வில் அறி­விக்க உள்­ளது.


இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: ஜவு­ளித் துறையை தொடர்ந்து, தோல் மற்­றும் காலணி துறைக்­கும், 2,600 கோடி ரூபாய்க்கு ஊக்­கத் திட்­டம் தயா­ரிக்­கப்­பட்டு உள்­ளது. வரி மற்­றும் வரி சாரா சலு­கை­களை கொண்­ட­தாக, இந்த திட்­டம் இருக்­கும். தோல் மற்­றும் காலணி துறை, ஏரா­ள­மான வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கக் கூடி­யது. இத்­துறை, ஒரு கோடி ரூபாய் முத­லீட்­டில், 250 பேருக்கு வேலை­வாய்ப்பு அளிக்க வல்­லது. தற்­போது, இத்­து­றை­யில், 30 லட்­சம் பேர் நேரடி வேலை­வாய்ப்பை பெற்­றுள்­ள­னர்.


இந்­திய தோல் மற்­றும் கால­ணி­கள் ஏற்­று­ம­திக்கு, சீனா போட்­டி­யாக விளங்­கு­கிறது. அக்­டோ­ப­ரில், தோல் மற்­றும் தோல் பொருட்­கள் ஏற்­று­மதி, 9 சத­வீ­தம் சரி­வ­டைந்து, 37 கோடி டால­ராக குறைந்­துள்­ளது. இந்­நி­லை­யில், மத்­திய அர­சின் ஊக்­கத் திட்­டம் அம­லுக்கு வந்­தால், தோல் மற்­றும் காலணி துறை­யில் வேலை­வாய்ப்பு பெரு­கும்; ஏற்­று­ம­தி­யும் அதி­க­ரிக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை