நேரடி விற்பனை விதிகள்: சிக்கிம், சத்தீஸ்கர் ஏற்பு

தினமலர்  தினமலர்
நேரடி விற்பனை விதிகள்: சிக்கிம், சத்தீஸ்கர் ஏற்பு

புதுடில்லி : ‘‘நேரடி விற்­பனை துறைக்­கான மாதிரி விதி­மு­றை­களை, சிக்­கிம் மற்­றும் சத்­தீஸ்­கர் மாநிலங்கள் நடை­மு­றைக்கு கொண்டு வந்­துள்ளன,’’ என, மத்­திய நுகர்­வோர் விவ­கா­ரங்­கள் துறை இணை அமைச்­சர், சி.ஆர்.சவுத்ரி தெரி­வித்து உள்­ளார்.


ஒரு நிறு­வ­னம் தயா­ரிக்­கும் பொருள், ஸ்டாக்­கிஸ்ட், வினி­யோ­கஸ்­தர், மொத்த விற்­ப­னை­யா­ளர், சில்­லரை விற்­ப­னை­யா­ளர் என, பல நிலை­களை கடந்து தான், நுகர்­வோரை அடை­கிறது. இவ்­வா­றின்றி, ஒரு நிறு­வ­னம், அதன் தயா­ரிப்பை நேர­டி­யாக நுகர்­வோ­ருக்கு அளிப்­பது, நேரடி விற்­பனை எனப்­ப­டு­கிறது.


ஆம்வே, ஹெர்­பா­லைப், டப்­பர்­வேர் உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள், நேரடி விற்­ப­னை­யில் ஈடு­ப­டு­கின்றன. இது போன்ற நிறு­வ­னங்­களின் பொருட்­களை, கடை­களில் விற்­பனை செய்ய, சட்­டத்­தில் இட­மில்லை. எனி­னும், தெளி­வான விதி­மு­றை­கள் இல்­லா­த­தால், முறை­கே­டு­களை தடுக்க, நேரடி விற்­ப­னைக்கு, தனி சட்­டம் இயற்ற வேண்­டும் என, தொழில் துறை­யி­னர் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.


இந்­நி­லை­யில், டில்­லி­யில், ‘அசோ­செம்’ நிகழ்ச்­சி­யில், சி.ஆர்.சவுத்ரி பேசி­ய­தா­வது: நேரடி விற்­ப­னைக்கு என, 2016ல், மாதிரி விதி­மு­றை­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன. இவற்றை, சிக்­கிம் மற்­றும் சத்­தீஸ்­கர் மாநி­லங்­கள் நடை­மு­றைக்கு கொண்டு வந்­துள்ளன. தமி­ழ­கம், கர்­நா­டகா மற்­றும் மஹா­ராஷ்­டிர மாநி­லங்­கள், அமல்­ப­டுத்­தும் முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்ளன. புதிய விதி­மு­றை­களில், பன்­ன­டுக்கு, ‘பிர­மிட்’ முறை விற்­பனை, பணப் பரிசு திட்­டம் போன்­ற­வற்­றுக்கு தடை விதிக்­கப்­பட்டு உள்­ளது. நேரடி விற்­பனை முறைக்கு, தனிச் சட்­டம் இயற்­றப்­படும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை