நிதி சாரா நிறுவனங்கள் கடன் தகுதி உயரும்; பொருளாதார வளர்ச்சி விறுவிறுப்படையும்

தினமலர்  தினமலர்
நிதி சாரா நிறுவனங்கள் கடன் தகுதி உயரும்; பொருளாதார வளர்ச்சி விறுவிறுப்படையும்

மும்பை : ‘இந்­தி­யா­வில், 2018ல், நிதி சாரா நிறு­வ­னங்­களின் கடன் தகுதி மேம்­படும்; நாட்­டின் பொரு­ளா­தா­ரம் மந்த நிலை­யில் இருந்து மீளும்’ என, அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘மூடிஸ்’ தெரி­வித்து உள்­ளது.


கடந்த வாரம், இந்­தி­யா­வின் கடன் தகுதி மதிப்பை, 13 ஆண்­டு­க­ளுக்கு பின், சாத­க­மான பிரி­வில் இருந்து, ஒரு நிலை உயர்த்தி, ஸ்தி­ர­மான பிரி­வில் சேர்த்த, ‘மூடிஸ்’ தற்­போது, ‘நிதி சாரா நிறு­வ­னங்­களின் கடன் தகுதி மேம்­படும்’ எனக் கூறி­யி­ருப்­பது, குறிப்­பி­டத்­தக்­கது.


இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டு உள்ள அறிக்கை: நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, அடுத்த, 12 – 18 மாதங்­களில், 7.6 சத­வீ­த­மாக இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. இத­னால், பொருட்­களின் விற்­பனை உய­ரும்; நிறு­வ­னங்­களின் உற்­பத்­தித் திறன் அதி­க­ரிக்­கும்; மூலப்­பொ­ருட்­கள் விலை மித­மான அள­வில் இருக்­கும். இத்­த­கைய கார­ணங்­க­ளால், மதிப்­பீட்டு காலத்­தில், நிதி சாரா நிறு­வ­னங்­களின், வரிக்கு முந்­தைய வரு­வாய் வளர்ச்சி, 5 – 6 சத­வீ­தம் அதி­க­ரிக்­கும்.


பெரும்­பா­லான நிறு­வ­னங்­கள், அவற்­றின் நிதி தேவை­களை, ரொக்க கையி­ருப்பு மற்­றும் பங்­குச் சந்­தை­கள் வாயி­லாக பூர்த்தி செய்து கொள்­ளும். அடுத்த மூன்று ஆண்­டு­களில், கடன் பத்­தி­ரங்­களின் முதிர்ச்­சியை சமா­ளிக்­கக் கூடிய அள­விற்கு, கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­களின் ஆற்­றல் அதி­க­ரிக்­கும். ஜி.எஸ்.டி., உள்­ளிட்ட சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களும், மூலப்­பொ­ருட்­களின் மித­மான விலை நில­வ­ர­மும், நிறு­வ­னங்­களின் செயல்­பாட்டு லாபத்தை அதி­க­ரிக்க
உத­வும். இத­னால், நிறு­வ­னங்­களின் கடன் தகுதி மதிப்பு உய­ரும்.


இது­த­விர, நிறு­வ­னங்­களின் சொத்து மதிப்­பும் உய­ரும் என்­ப­தால், அவற்­றின் ஒட்­டு­மொத்த கடன் தகுதி மதிப்பு அதி­க­ரிக்­கும். அதே சம­யம், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 6 சத­வீ­தத்­திற்­கும் கீழாக வீழ்ச்சி கண்­டாலோ அல்­லது விளை பொருட்­கள் விலை சரி­வ­டைந்­தாலோ, நிதி சாரா நிறு­வ­னங்­களின் வரிக்கு முந்­தைய வரு­வாய் வளர்ச்சி குறைய வாய்ப்­புள்­ளது. மேலும், மத்­திய அர­சின் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை செயல்­பாட்­டிற்கு கொண்டு வரு­வ­தில் உண்­டா­கும் தாம­தம்; ஸ்தி­ர­மற்ற அர­சி­யல் சூழல்; வட்டி உயர்வு; பண­வீக்­கம் அதி­க­ரிப்பு; டால­ருக்கு நிக­ரான ரூபாய் மதிப்­பில் அதிக ஏற்ற, இறக்­கம் போன்­றவை நிகழ்ந்­தால், நிறு­வ­னங்­களின் வளர்ச்சி தடை­படும். அவற்­றின் கடன் தகுதி மதிப்பு குறை­யும் ஆபத்­தும் உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.


லாப வரம்பில் தாக்கம்:

எண்­ணெய், ரியல் எஸ்­டேட், வாக­னம், வாகன உதிரி பாகங்­கள், தக­வல் தொழில்­நுட்ப சேவை­கள் ஆகிய துறை­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­களின் கடன் தகுதி மதிப்பு, சாத­க­மான நிலை­யில் இருக்­கும். தொலை தொடர்பு துறை­யில் நில­வும் கடும் போட்டி, அடுத்த, 12 மாதங்­களில், முன்­னணி நிறு­வ­னங்­களின் வரு­வாய் மற்­றும் லாப வரம்­பில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்.

மூலக்கதை