மம்முட்டி படத்தில் துல்கருக்கு இடமில்லை

தினமலர்  தினமலர்
மம்முட்டி படத்தில் துல்கருக்கு இடமில்லை

பத்து வருடங்களுக்கு முன் மம்முட்டி நடித்த சூப்பர் ஹிட் படம் தான் 'பிக் பி'. இதில் பிலால் என்கிற டான் கேரக்டரில் மம்முட்டி நடித்திருந்தார். இந்தப்படத்தை இயக்கிய இயக்குனர் அமல் நீரத், தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை மம்முட்டியை வைத்து இயக்கப்போவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இதில் முக்கியமான கேரக்டரில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக சோஷியல் மீடியாவில் ஒரு தகவல் பரவிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் துல்கர் நடிப்பது ஒரு படத்திற்கு பிளஸ் பாயின்ட் தான் என்றாலும், இந்தப்படத்தில் துல்கர் நடிப்பதற்கான கேரக்டர் எதுவும் இல்லை என இப்போதே அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் இயக்குனர் அமல் நீரத்.

மூலக்கதை