தெலுங்கிலும் கால் பதிக்கும் காயத்ரி சுரேஷ்..!

தினமலர்  தினமலர்
தெலுங்கிலும் கால் பதிக்கும் காயத்ரி சுரேஷ்..!

மலையாள சினிமாவில் கீர்த்தி சுரேஷை தொடர்ந்து, காயத்ரி சுரேஷ் என்கிற நடிகையும் மலையாள திரையுலகில் நடித்து வருகிறார். மிஸ் கேரளா 2014 பட்டம் வென்ற இவர், குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடித்த ஜமுனா பியாரி என்கிற படத்தில் அறிமுகமானார். மலையாளத்தில் ஓரளவு தெரிந்த முகமாகிவிட்டால், அடுத்தபடியாக தமிழுக்கு வந்து தானே ஆக வேண்டும்..

அப்படித்தான் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் 4ஜி படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். அதை தொடர்ந்து தற்போது தெலுங்கிலும் நடிக்க காயத்ரி சுரேஷுக்கு வாய்ப்பு தேடிவந்துள்ளது. இளம் நடிகர் ராஜ் தருணுக்கு ஜோடியாக நடிக்கும் காயத்ரி சுரேஷ், அனுபமா, சாய்பல்லவி, கீர்த்தி சுரேஷ் போல ஒரு இடத்தை பிடித்துவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தில் இருக்கிறாராம்.

மூலக்கதை