சவுதி அரேபியாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

தினமலர்  தினமலர்
சவுதி அரேபியாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

ஜெத்தா : சவுதி அரேபியாவின் ஜெத்தா, மெக்கா, டயிப் உள்ளிட்ட பல நகரங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன.
கடந்த 2009 ம் ஆண்டிற்கு பிறகு தற்போது ஜெத்தாவில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் ஆறுகளைப் போல் மார்பளவிற்கு நீர் தேங்கி உள்ளது. ஜெத்தா, மெக்கா நகரங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கனமழை மற்றும் பலத்த சூறைக்காற்று தொடர வாய்ப்புள்ளதால் பல சாலைகளை மூட மெக்கா பேரிடர் மேலாண் மையம் அறிவுறுத்தி உள்ளது.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், ஆறுகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் அந்நாட்டு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கனமழை, அதனால் எங்கு வெள்ளக்காடாக காட்சி அளிப்பது, அதில் மிதக்கும் வாகனங்கள், மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளது போன்ற போட்டோக்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மூலக்கதை