அனைத்து வங்கி கணக்குகளையும் மூடவேண்டும்! - தேசிய முன்னணிக்கு Société Générale தெரிவிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
அனைத்து வங்கி கணக்குகளையும் மூடவேண்டும்!  தேசிய முன்னணிக்கு Société Générale தெரிவிப்பு!!

Société Générale வங்கியில் உள்ள அனைத்து கணக்குகளையும் மூடவேண்டும் என தேசிய முன்னணி கட்சியினருக்கு குறித்த வங்கி தெரிவித்துள்ளது. இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் மரீன்-லூ-பென்னின் தேசிய முன்னணி கட்சியின் ஆஸ்தான வங்கியான Société Générale இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. இதனால் விரைவில் கட்சியினர் வேறு வங்கியினை நாடவேண்டிய கட்டாயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக இச்செய்தி வெளியிடப்படவில்லை என்றபோதும், சில புலனாய்வு பத்திரிகைகள் இத்தகவல்களை வெளியிட்டுள்ளன. கட்சி அலுவலகத்துக்கு Société Générale வங்கி மின்னஞ்சல் மூலம் இச்செய்தியினை அறிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படாத நிலையில், Société Générale வங்கியின் தலைமைச் செயலகம் இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கட்சி தொடர்பாக எந்த கடனும் இல்லை என கட்சியினர் உறுதிப்படுத்தியுள்ள போதும், வங்கி இது தொடர்பான தகவல்களை வெளியிட மறுத்துள்ளது. தொடர்ந்து விரைவில் தேசிய முன்னணி கட்சி தொடர்பான நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகள் அனைத்தும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை