துப்பரவு தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்! - தொடரூந்து நிலையங்களில் குவியும் குப்பைகள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
துப்பரவு தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்!  தொடரூந்து நிலையங்களில் குவியும் குப்பைகள்!!

துப்பரவு தொழிலாளர்களின் தொடர் வேலை நிறுத்தத்தால் இல்-து-பிரான்சுக்குள் பல தொடரூந்து நிலையங்கள் குப்பைகளால் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சின் வடக்கு பிராந்தியங்களில் உள்ள 75 தொடரூந்து நிலையங்கள் கணிசமான குப்பைகளாலும் துர்நாற்றத்தினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடரூந்து நிலையங்களில் பணிபுரியும் துப்பரவு தொழிலாளர்கள்  கடந்த நவம்பர் 2 ஆம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இல்-து-பிரான்சின் வடக்கு பகுதி தொடரூந்து நிலையங்களில்  (வழி B, D, H மற்றும் K) உள்ள குப்பை தொட்டிகள் நிரம்பி வழிகின்றன எனவும், குப்பைத் தொட்டிகளை சுற்றிலும் குப்பைகள் குவிகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பலத்த அசெளகரியங்களுக்கு ஆளாகுவதாகவும் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர். 
 
SNCF, தொடரூந்து நிலையங்களுக்கான துப்பரவு பணிகளை H. Reinier (ONET நிறுவனத்தின் கிளை நிறுவனம்) எனும் நிறுவனத்துக்கு கொடுத்திருந்தது. இந்நிலையில் நிறுவனத்துக்கும் பணியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள சில குழப்பங்கள் காரணமாக அவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சனையில் SNCF மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் ஒப்பந்தம் வேறு நிறுவனத்துக்கு மாற்றப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

மூலக்கதை