காமெடி நடிகை அதிரடி..!

PARIS TAMIL  PARIS TAMIL
காமெடி நடிகை அதிரடி..!

 தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் எண்ணிக்கையில் உள்ள காமெடி நடிகைகளில் முக்கியமானவர் வித்யுலேகா ராமன். பெரும்பாலும் இவர் வரும் காட்சிகளில் தனது உருவத்தாலும், பாடி லாங்குவேஜாலும் ரசிகர்களை சிரிக்க வைத்துவிடக்கூடியவர். ஆனால் என்ன ஆச்சோ, தெரியவில்லை, தனது டுவிட்டர் பக்கத்தில் கவர்ச்சியான தனது இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார் வித்யு..

 
“நீண்ட நாட்களாக காமெடி நடிகைகளாகவே நடித்து வரும் நடிகைகளால் கவர்ச்சியாக, செக்ஸியாக காட்சி தர முடியாது என ரசிகர்கள் முத்திரை குத்திவிடுவார்கள். ஆனால் என்னால் முடியும் என சொல்லும் விதமாக இந்தப்படங்களை வெளியிட்டுள்ளேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார் வித்யுலேகா ராமன்.
 

மூலக்கதை