மின் வாகன பாகங்கள் தயாரிப்பில் சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனம்

தினமலர்  தினமலர்
மின் வாகன பாகங்கள் தயாரிப்பில் சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனம்

சென்னை : டி.வி.எஸ்., குழும நிறு­வ­னங்­களில் ஒன்­றான, சுந்­த­ரம் பாஸ்­ட­்னர்ஸ் நிறு­வ­னம், மின் வாக­னங்­க­ளுக்­கான பாகங்­கள் தயா­ரிப்­பில் கள­மி­றங்கி உள்­ளது. இவற்­றுக்­கான ஆர்­டரை, அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த, மின் கார் தயா­ரிப்­பில் ஈடு­படும், ‘டெஸ்லா’ நிறு­வ­னத்­தி­டம் இருந்து பெற்­றுள்­ளது.


இது குறித்து, சுந்­த­ரம் பாஸ்­ட்­னர்ஸ் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­னர், சுரேஷ் கிருஷ்ணா கூறி­ய­தா­வது: மின் வாக­னங்­க­ளுக்­கான கியர்­கள், ரேடி­யேட்­டர் டேங்க் மூடி­கள் தயா­ரிப்­பில் ஈடு­பட்டு உள்­ளோம். இந்­தி­யா­வில், 2030ல், மின் கார் பயன்­பாட்டை பர­வ­லாக்க, மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யித்து உள்­ளது. எனி­னும், இக்­கால கட்­டத்­தில், உல­க­ள­வில், மின் வாக­னங்­களின் பங்கு, 8 சத­வீத அள­விற்கே இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.


அதற்­கேற்ப, நிறு­வ­னத்­தின் வர்த்­த­கத்­தில், 15 சத­வீ­தம், மின் வாகன பாகங்­கள் தயா­ரிப்­பாக இருக்­கும். அதே சம­யம், 2040ல், சர்­வ­தேச அள­வில், மின் வாக­னங்­களின் பயன்­பாடு, 30 – 40 சத­வீ­த­மாக உய­ரும். அத­னால், வாகன உதிரி பாகங்­கள் தொழி­லில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள், மின் வாக­னங்­க­ளுக்கு தேவை­யா­ன­வற்­றை­யும் தயா­ரிக்­கும் திறனை உரு­வாக்­கிக் கொள்­வது அவ­சி­யம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை