‘வாட்ஸ் ஆப்’பில் வர்த்தக ரகசியம் கசிவு; ‘செபி’ வளையத்தில் 24 நிறுவனங்கள்

தினமலர்  தினமலர்
‘வாட்ஸ் ஆப்’பில் வர்த்தக ரகசியம் கசிவு; ‘செபி’ வளையத்தில் 24 நிறுவனங்கள்

புதுடில்லி : நிறு­வ­னங்­களின் நிதி நிலை அறிக்­கை­கள், அதி­கா­ர­பூர்­வ­மாக வெளி வரு­வ­தற்கு முன்­பா­கவே, அவை, ‘வாட்ஸ் ஆப்’ குழு­வில் கசிந்­தது தொடர்­பாக, 24 நிறு­வ­னங்­களை, ‘செபி’ கண்­கா­ணிப்பு வளை­யத்­திற்­குள் கொண்டு வந்­துள்­ளது.


ஜூலை­யில், டாக்­டர் ரெட்­டீஸ் லேப்ஸ் நிறு­வ­னத்­தின், முதல் காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளி­யா­கும் முன், அந்­நி­று­வ­னம் இழப்பை சந்­திக்­கும் என, ‘மார்­கெட் சாட்­டர்’ உள்­ளிட்ட சில, ‘வாட்ஸ் ஆப்’ குழுக்­களில், தக­வல் பர­வி­யது. அதற்­கேற்ப, மூன்று நாட்­கள் கழித்து வெளி­யி­டப்­பட்ட நிதி­நிலை அறிக்­கை­யில், டாக்­டர் ரெட்­டீஸ் லேப்ஸ், 50 கோடி ரூபாய் இழப்பை கண்­டி­ருந்­தது. இதே போல, 12 நிறு­வ­னங்­களின் நிதி நிலை தக­வல்­கள், அதி­கா­ர­பூர்வ வெளி­யீட்­டிற்கு முன்­பா­கவே, வாட்ஸ் ஆப் குழுக்­களில் பர­வின.


இந்த கசிவு குறித்த தக­வல், சமீ­பத்­தில் வெளி­யா­னதை அடுத்து, 24 நிறு­வ­னங்­களின் பங்கு வர்த்­தக நில­வ­ரம் குறித்து, ‘செபி’ ஆய்வு செய்­கிறது. இந்­நி­று­வ­னங்­கள், விதி­களை மீறி, பங்கு வர்த்­த­கத்­தில் ஆதா­யம் பெறும் நோக்­கோடு, தக­வல்­களை முன்­ன­தாக கசிய விட்­டது நிரூ­ப­ண­மா­னால், உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என, தெரி­கிறது.

மூலக்கதை