சரக்கு போக்குவரத்து துறைக்கு அடிப்படை கட்டமைப்பு அந்தஸ்து

தினமலர்  தினமலர்
சரக்கு போக்குவரத்து துறைக்கு அடிப்படை கட்டமைப்பு அந்தஸ்து

மும்பை : சரக்கு போக்­கு­வ­ரத்து துறைக்கு, அடிப்­படை கட்­ட­மைப்பு அந்­தஸ்து வழங்­கும் மத்­திய அர­சின் முடிவை, இத்­துறை சார்ந்த நிறு­வ­னங்­கள் வர­வேற்று உள்ளன.


அடிப்­படை கட்­ட­மைப்பு துறை­யில், எரி­சக்தி, குடி­நீர், சுகா­தா­ரம், தக­வல் தொடர்பு, சமூ­கம் மற்­றும் வர்த்­தக உட்­கட்­ட­மைப்பு வச­தி­கள் இடம் பெற்­றுள்ளன. தற்­போது, சரக்கு போக்­கு­வ­ரத்து, சரக்கு பெட்­டக பணி­ம­னை­கள், குளிர்­சாதன கிடங்­கு­கள், சரக்கு கிடங்­கு­கள் ஆகி­ய­வற்­றுக்கு, அடிப்­படை கட்­ட­மைப்பு வசதி என்ற அந்­தஸ்து கிடைத்­துள்­ளது.


இது குறித்து, மகிந்­திரா லாஜிஸ்­டிக்ஸ் நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி, பிரோஜ்ஷா சர்­காரி கூறி­ய­தா­வது: சரக்கு போக்­கு­வ­ரத்து துறைக்கு, அடிப்­படை கட்­ட­மைப்பு அந்­தஸ்து அளித்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. இத­னால், சரக்கு போக்­கு­வ­ரத்து செலவு குறை­யும். ஜி.எஸ்.டி., அறி­மு­கம் கார­ண­மாக, சுங்­கச்­சா­வ­டி­களில், சரக்கு லாரி­கள் நிற்­கா­மல் செல்­வ­தால், நேர­மும், போக்­கு­வ­ரத்து செல­வும், 20 சத­வீ­தம் மிச்­ச­மாகி உள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.


அவ்­வாஷ்யா, சி.சி.ஐ., லாஜிஸ்­டிக்ஸ் நிறு­வ­னத்­தின் தலைமை செயல் அதி­காரி, தீபல் ஷா கூறு­கை­யில், ‘‘அர­சின் முடி­வால், சரக்கு போக்­கு­வ­ரத்து துறை­யி­ன­ரின் செலவு, 0.50 சத­வீ­தம் மிச்­ச­மா­கும். அத்­து­டன், குறைந்த வட்­டி­யில் கடன் கிடைக்­கும்,’’ என்­றார்.


முதலீடு:

அடிப்­படை கட்­ட­மைப்பு துறை­யில், குறைந்­த­ பட்­சம், 10 ஏக்­க­ரில், 50 கோடி ரூபாய் முத­லீட்­டில், சரக்கு பெட்­டக பணி­ம­னை­களை உள்­ள­டக்­கிய, பன்­முக சரக்கு போக்­கு­வ­ரத்து பூங்­காக்­கள் இடம் பெற்­றுள்ளன. மேலும், 15 கோடி ரூபாய் முத­லீட்­டி­லான, குளிர்­ப­தன கிடங்கு, 25 கோடி ரூபா­யில் அமைக்­கப்­படும். சரக்கு கிடங்­கு­களும், இப்­பி­ரி­வின் கீழ் கொண்டு வரப்­பட்டு உள்ளன.

மூலக்கதை