வங்கி காசோலைக்கு வருகிறது, ‘வேட்டு’; பிரதமர் மோடியின் அடுத்த வியூகம்

தினமலர்  தினமலர்
வங்கி காசோலைக்கு வருகிறது, ‘வேட்டு’; பிரதமர் மோடியின் அடுத்த வியூகம்

புதுடில்லி : ‘நாட்­டில், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­களை ஊக்­கு­விக்க, வங்கி வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் காசோலை வச­தியை, மத்­திய அரசு திரும்­பப் பெறக் கூடும்’ என, இந்­திய வர்த்­த­கர்­கள் கூட்­ட­மைப்பு தெரி­வித்து உள்­ளது.


இந்த அமைப்­பின் தலை­வர், பிர­வீன் கந்­தல்­வால் பேசி­ய­தா­வது: பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு பின், ரொக்­கப் பரி­வர்த்­த­னை­கள் சற்று குறைந்­துள்ள நிலை­யில், காசோலை வாயி­லான பணப் பரி­மாற்­றம் அதி­க­ரித்­தி­ருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. அத­னால், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னையை ஊக்­கு­விக்க, வங்கி வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான, காசோலை வச­தியை திரும்­பப் பெறு­வது குறித்து, மத்­திய அரசு ஆலோ­சிப்­ப­தாக தெரி­கிறது.


இத்­திட்­டம் அம­லா­னால், மின்­னணு பணப் பரி­வர்த்­தனை அதி­க­ரிக்­கும் என்­ப­து­டன், ரூபாய் நோட்­டு­கள் அச்­ச­டிக்­கும் செல­வும் கணி­ச­மாக குறை­யும். தற்­போது, மத்­திய அரசு, ரூபாய் நோட்­டு­களை அச்­ச­டிக்க, பல்­லா­யி­ரம் கோடி ரூபாயை செல­வ­ழிக்­கிறது. இத்­து­டன், பணப் போக்­கு­வ­ரத்து மற்­றும் பாது­காப்­பிற்­கா­க­வும், கோடிக்­க­ணக்­கில் செல­வி­டப்­ப­டு­கிறது. மின்­னணு பணப் பரி­வர்த்­தனை அதி­க­ரிக்க வேண்­டு­மென்­றால், இவ்­வகை பரி­வர்த்­த­னை­க­ளுக்கு, அரசு ஊக்­கத்­தொகை வழங்க வேண்­டும்.


தற்­போது, வணி­கர்­களின், ‘கிரெ­டிட்’ கார்டு பரி­வர்த்­த­னைக்கு, வங்­கி­கள், 2 சத­வீ­தம் செயல்­பாட்டு கட்­ட­ணம் வசூ­லிக்­கின்றன. இது, ‘டெபிட்’ கார்டு பரி­வர்த்­த­னைக்கு, 1 சத­வீ­த­மாக உள்­ளது. இந்த கட்­ட­ணத்தை, மத்­திய அரசு, நேர­டி­யாக வங்­கி­க­ளுக்கு செலுத்தி, வணி­கர்­களின் நிதிச்­சு­மையை குறைக்­க­லாம். இத­னால், சிறிய வணி­கர்­களும், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னைக்கு மாறு­வர். இவ்­வாறு அவர் கூறி­னார்.


பிர­த­மர் மோடி, 2016 நவ., 8ல், பண மதிப்பு நீக்க அறி­விப்பை வெளி­யிட்­டார். இதை­ய­டுத்து ஏற்­பட்ட பணத் தட்­டுப்­பாடு கார­ண­மாக, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­கள் அதி­க­ரித்­தன. டிசம்­ப­ரில், மின்­னணு பணப் பரி­வர்த்­தனை, அதி­க­பட்­ச­மாக, 100 கோடியை எட்­டி­யது. இது, இந்தாண்டு செப்­டம்­ப­ரில், 87.70 லட்­ச­மாக குறைந்­துள்­ளது. இதை, நடப்பு நிதி­யாண்­டிற்­குள், 2.50 கோடி­யாக உயர்த்த, மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யித்­து உள்­ளது. ஆனால், தற்­போ­தைய சூழ­லில், இந்த இலக்கை எட்ட வாய்ப்­பில்லை என, தெரி­கிறது. எனவே, வங்கி காசோ­லைக்கு தடை விதிப்­பது, மின்­னணு பரி­வர்த்­த­னைக்கு மானி­யம் வழங்­கு­வது போன்­ற­வற்றை, மத்­திய அரசு செயல்­ப­டுத்த வாய்ப்­புள்­ளது. இது, பிர­த­மர் மோடி­யின் அடுத்த அதி­ரடி நட­வ­டிக்­கை­யாக இருக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.


புழக்கம் குறைந்தது:

பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்கு முன், நாட்­டில், 17.90 லட்­சம் கோடி ரூபாய் உயர் மதிப்பு நோட்­டு­கள் புழக்­கத்­தில் இருந்­தன. இதில், 91 சத­வீ­தம், அதா­வது, 16.3 லட்­சம் கோடி ரூபாய், தற்­போது புழக்­கத்­தில் உள்­ளது. 2016 நவ., – 2017 செப்., வரை, மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­கள், 31 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்ளன.
ரிசர்வ் வங்கி

மூலக்கதை