நாமக்கல் முட்டை 516 காசாக நீடிப்பு

தினகரன்  தினகரன்

நாமக்கல்: நாமக்கல் முட்டை விலை 516 காசாக தொடர்ந்து நீடிக்கிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 516 காசாகவே நீடிப்பது என நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ முட்டைக்கோழி விலை ரூ.93 ஆகவும், ஒரு கிலோ கறிக்கோழி ரூ.61 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. பிற மண்டலங்களில் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை விபரம்(காசுகளில்) வருமாறு: ஐதராபாத் 535, விஜயவாடா 510, மும்பை 582, மைசூரு 555, பெங்களூரு 550, கொல்கத்தா 562, டெல்லி 553, சென்னை 565.

மூலக்கதை