ஓட்டல்களுக்கு அறிவுரை

தினகரன்  தினகரன்

டெல்லி: கடந்த ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு, பொருட்களின் விலை குறையவில்லை என புகார்கள் வந்தன. அதிக வரி இருப்பதால் உற்பத்தியாளர்கள், சேவை அளிப்பவர்களுக்கு விலையை குறைப்பதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக வந்த புகார்கள், கருத்துக்கள் அடிப்படையில் பரிசீலனை செய்துதான் வரி குறைக்கப்பட்டது. ஓட்டல்களுக்கும் இந்த வகையில்தான் அவர்களின் வர்த்தக அளவை கருத்தில் கொள்ளாமல் 5 சதவீத வரியாக குறைக்கப்பட்டது. ஆனால் ஓட்டல்கள் உள்ளீட்டு வரி வரவை ரத்து செய்ததால் விலையை குறைக்கவில்லை என்று புகார்கள் வருகின்றன. இது தவறானது. உள்ளீட்டு வரி வரவு பெறுவதற்கான தகுதி சில ஓட்டல்களுக்கு மட்டுமே உள்ளது. எனவே இதையும், தொழில் போட்டியையும் கருத்தில் கொண்டு விலையை உயர்த்துவதை தவிர்க்க வேண்டும் என ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார்.

மூலக்கதை