20 காரட் தங்க நகைக்கு, ‘ஹால்மார்க்’ - வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை

தினமலர்  தினமலர்
20 காரட் தங்க நகைக்கு, ‘ஹால்மார்க்’  வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை

புதுடில்லி : ‘மத்­திய அரசு, 20 காரட் தங்க நகை­க­ளுக்­கும், ‘ஹால்­மார்க்’ முத்­தி­ரையை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும்’ என, இந்­திய வர்த்­தக கூட்­ட­மைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.இது குறித்து, இந்த அமைப்பு, நுகர்­வோர் விவ­கா­ரங்­கள் துறை அமைச்­சர், ராம்­வி­லாஸ் பஸ்­வா­னுக்கு எழு­தி­யுள்ள கடி­தம்:மத்­திய அரசு, தங்­கத்­தின் தரத்தை குறிக்­கும் வகை­யில், 14, 18 மற்­றும், 22 காரட் ஆப­ர­ணங்­க­ளுக்கு, ‘ஹால்­மார்க்’ முத்­தி­ரையை, ஜன­வரி முதல் கட்­டா­யம் ஆக்­கு­வது குறித்து பரி­சீ­லித்து வரு­கிறது.இந்த மூன்று வகை­யானதர நிர்­ண­யம், சர்­வ­தேச அள­வில் பின்­பற்­றப்­ப­டு­கின்றன. எனி­னும், இந்­தி­யா­விற்கு என, கூடு­த­லாக புதிய தர நிர்­ணய அளவை அறி­மு­கம் செய்ய வேண்­டும்.தங்­கத்­தின் தரத்தை குறிக்­கும் வகை­யில், 83.3 சத­வீத துாய்மை­யைக் கொண்ட, 20 காரட் தங்க நகை­க­ளுக்­கும், ‘ஹால்­மார்க்’ சான்று வழங்க வேண்­டும்.இத­னால், எளிய மக்­களும்தங்­க­ளுக்கு தேவை­யான தரத்­தில் தங்க நகை­களை வாங்க முடி­யும். அத்­து­டன், நுகர்­வோர் மற்­றும் நகை வியா­பா­ரி­கள் இடை­யி­லான நம்­ப­கத்­தன்­மை­யும், பொறுப்­பும் அதி­க­ரிக்­கும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை