வடகொரியா பயங்கரவாத்தை ஆதரிக்கிறது : டிரம்ப் குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்
வடகொரியா பயங்கரவாத்தை ஆதரிக்கிறது : டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: பயங்கரவாதத்தை வடகொரியா ஆதரிக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப்கூறினார்.

ஐ.நா. தீர்மானத்தை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்தி வருகிறது. இதற்காக அந்த நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்க அமைச்சரவை கூட்டம் அதிபர் டெனால்ட் டிரம்ப் தலைமையில் நடந்தது. பின்னர் டிரம்ப் கூறியது, வடகொரியா தொடர்ந்து அணு சோதனை நடத்தி வருவதுடன் பயங்கரவாதத்தையும் ஆதரிக்கிறது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளான ஈரான்,சிரியா, சூடான் ஆகிய நாடுகளுடன் கூட்டுசேர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த திட்டம் தீட்டுகிறது என்றார்.

மூலக்கதை