‘எல் அண்டு டி.,’ நிறுவனத்தை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு

தினமலர்  தினமலர்
‘எல் அண்டு டி.,’ நிறுவனத்தை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு

மும்பை : ‘‘ரிலை­யன்ஸ், பிர்லா குழு­மங்­கள், எல் அண்டு டி.,யை கைப்­பற்ற மேற்­கொண்ட முயற்சி முறி­ய­டிக்­கப்­பட்­டது,’’ என, எல் அண்டு டி., நிறு­வ­னத்­தின் செயல் சாரா தலை­வர், ஏ.எம்.நாயக் தெரி­வித்­துள்­ளார்.சாதா­ரண இள­நிலை பொறி­யா­ள­ராக, 1965ல் எல் அண்டு டி.,யில் சேர்ந்த நாயக், அதன் தலை­வர் பொறுப்­பில் இருந்து, செப்­டம்­ப­ரில் ஓய்வு பெற்­றார்.இவ­ரின், ‘தி நேஷ­ன­லிஸ்ட்’ என்ற வாழ்க்கை வர­லாற்று நுால் வெளி­யீட்டு விழா, டில்­லி­யில் நடை­பெற்­றது.அதில், ஏ.எம்.நாயக் பேசி­ய­தா­வது:எல் அண்டு டி.,யில் குறிப்­பி­டத்­தக்க பங்கை, 1987ல் வாங்­கிய, ரிலை­யன்ஸ் இண்­டஸ்­டி­ரிஸ் தலை­வர், திரு­பாய் அம்­பானி, 1989ல் திடீ­ரென்று பல நிதி நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து, முழு­மை­யாக கைய­கப்­ப­டுத்த முயற்­சித்­தார். அச்­ச­ம­யத்­தில், பார்­லி­மென்ட் தேர்­த­லில், காங்., தோல்­வி­ய­டைந்­த­தால், அம்­மு­யற்சி பலிக்­க­வில்லை.இதை­ய­டுத்து, 2001ல் நான் சிகா­கோ­வில் இருந்­த­போது, எல் அண்டு டி., சிமென்ட் பிரி­வின் தலை­வர், மோகன் கர்­னானி எனக்கு போன் செய்து, ‘நம் நிறு­வ­னம் பிர்­லா­வி­டம் போய்­விட்­டது’ என்­றார். எனக்கு அதிர்ச்­சி­யாக இருந்­தது. சிறிது நேரத்­தில், ரிலை­யன்ஸ் நிர்­வாக இயக்­கு­ன­ராக இருந்த அனில் அம்­பானி, ‘நீங்­கள் எங்­களை விரும்­ப­வில்லை. அத­னால், அனைத்து பங்­கு­க­ளை­யும் குமா­ர­மங்­க­லம் பிர்­லா­வுக்கு தந்து விட்­டோம்’ என்­றார்.உட­ன­டி­யாக இந்­தியாவந்த நான், எல் அண்டு டி., தொழி­லா­ளர் நல அறக்­கட்­ட­ளையை உரு­வாக்கி, அதன் மூலம் பிர்­லா­வின் பங்­கு­க­ளை­யும்வாங்கி, சிமென்ட் பிரிவை தனியே பிரித்து, பிர்­லா­விற்கு அளித்­தேன்.இத­னால், பொறி­யி­யல், தயா­ரிப்பு மற்­றும் திட்ட வடி­வ­மைப்பு என்ற மூன்று பிரி­வு­களில், தன்­னி­க­ரற்ற நிறு­வ­ன­மாக, எல் அண்டு டி., உரு­வெ­டுத்­தது. எல் அண்டு டி.,யை அதன் தொழி­லா­ளர்­க­ளுக்கு சொந்­த­மாக்­கி­னேன்.இவ்­வாறு அவர் பேசினார்.

மூலக்கதை