‘பிட்காய்ன்’ கிடுகிடு உயர்வு: 8,000 டாலரை தாண்டியது

தினமலர்  தினமலர்
‘பிட்காய்ன்’ கிடுகிடு உயர்வு: 8,000 டாலரை தாண்டியது

புதுடில்லி : வலை­த­ளங்­களில் புழங்­கும், ‘பிட்­காய்ன்’ என்ற மெய்­நி­கர் கரன்­சி­யின் மவுசு, நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது.நேற்று, மெய்­நி­கர்கரன்சி சந்­தை­யில், ‘பிட்­காய்ன்’ மீதான வர்த்­த­கம் விறு­வி­றுப்­பாக இருந்­தது. வர்த்­த­கத்­தின் இடையே, ஒரு கட்­டத்­தில், பிட்­காய்ன் விலை, முதன் முறை­யாக, 8,071.05 டாலரை எட்­டி­யது. இது, இந்­தாண்­டின் துவக்­கத்­தில் காணப்­பட்ட விலையை விட, 700 சத­வீ­தம் அதி­கம். எனி­னும், இந்த கரன்சி, இந்­தாண்டு மூன்று முறை பெரும் சரி­வைக் கண்­டது. பிட்­காய்ன் மதிப்பு, 25 சத­வீ­தம் வரை குறைந்து இருந்­தது. இம்­மாத துவக்­கத்­தில், இதன் மதிப்பு, 29 சத­வீ­தம் வீழ்ச்சி கண்­டி­ருந்­தது.இதற்கு, ‘பிட்­காய்ன் கேஷ்’ போன்ற போட்டி, மெய்­நி­கர் கரன்­சி­கள் பெருகி வரு­வது தான் கார­ணம் என கூறப்­ப­டு­கிறது.எனி­னும், அதிக இடர்ப்­பாட்­டிற்கு வாய்ப்­புள்ள பிட்­காய்ன் கரன்­சிக்கு, முத­லீட்டு வல்­லு­னர்­களின் ஆத­ரவு உள்­ளது. மிகக் குறைந்த பரி­வர்த்­தனை கட்­ட­ணம், வேக­மான செயல்­பாடு போன்ற அம்­சங்­க­ளால், பிட்­காய்ன் வர்த்­த­கத்­திற்கு மவுசு அதி­க­ரித்து, அதன் மதிப்பு உயர்ந்து வரு­கிறது.

மூலக்கதை