‘ஸ்டார்ட் அப்’ துறையை ஊக்குவிக்க ‘கிரவுட் பண்டு’ முதலீடுகளுக்கு நிறுவனங்கள் சட்டத்தில் விலக்கு?

தினமலர்  தினமலர்
‘ஸ்டார்ட் அப்’ துறையை ஊக்குவிக்க ‘கிரவுட் பண்டு’ முதலீடுகளுக்கு நிறுவனங்கள் சட்டத்தில் விலக்கு?

மும்பை, நவ. 21–மத்­திய அரசு, ‘கிர­வுட் பண்டு’ முறை­யில், முத­லீ­டு­களை திரட்­டும் நிறு­வ­னங்­க­ளுக்கு, இந்­திய நிறு­வ­னங்­கள் சட்­டத்­தில் இருந்து, விலக்கு அளிப்­பது குறித்து பரி­சீ­லித்து வரு­வ­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.தற்­போது, இணை­யம் அல்­லது சமூக வலை­த­ளங்­கள் மூலம் தனிப்­பட்ட நபர்­க­ளி­டம் இருந்து முத­லீ­டு­களை திரட்டி, தொழில் துவங்­கு­வது அதி­க­ரித்து வரு­கிறது. அந்த தொழி­லில் கிடைக்­கும் லாபம், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு பகிர்ந்து அளிக்­கப்­ப­டு­கிறது.இத்­த­கைய கூட்டு முத­லீட்டு நடை­முறை, ‘கிர­வுட் பண்டு’ என, அழைக்­கப்­ப­டு­கிறது.இந்த வகை­யில் திரைப்­ப­டங்­களை தயா­ரிப்­பது, இசை ஆல்­பங்­கள் உரு­வாக்­கு­வது, நுால் வெளி­யீடு, புகைப்­ப­டம், சுற்­றுலா என, பல்­வேறு திட்­டங்­க­ளுக்­காக கூட்டு முத­லீடு திரட்­டப்­ப­டு­கிறது.இத்­த­கைய முத­லீ­டு­களை திரட்­டித் தரு­வ­தற்­கென, ‘இம்­பாக்ட் குரு, மிலாப், கெட்டோ, விஷ்­பெரி’ போன்ற பல நிறு­வ­னங்­கள் உள்ளன. தனிப்­பட்ட முறை­யி­லும், பலர் முத­லீ­டு­களை திரட்­டு­கின்­ற­னர்.இத்­த­கைய கூட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­களை, அமைப்பு ரீதி­யில் கொண்டு வந்­தால், அதன் மூலம் பல்­வேறு துறை­கள் பயன் பெறும் என, மத்­திய அரசு கரு­து­கிறது.ஆனால், இந்­திய நிறு­வ­னச் சட்­டத்­தின், 42வது பிரிவு, கூட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­களின் வளர்ச்­சிக்கு தடை­யாக உள்­ளது. இப்­பி­ரிவு, ‘ஒரு நிறு­வ­னம், ஒரு திட்­டத்­தின் கீழ், 50 பேரி­டம் மட்­டுமே முத­லீட்டை திரட்­ட­லாம்’ என, கூறு­கிறது.இந்த வகை­யில், ஒரு நிறு­வ­னம், ஓராண்­டில், 200 பேரி­டம் முத­லீட்டை பெற­லாம். அதற்கு மேற்­பட்ட நபர்­கள் முத­லீடு மேற்­கொண்­டால், கண்­டிப்­பாக அந்­நி­று­வ­னம் பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்கி, பங்­குச் சந்­தை­யில் பங்­கு­களை பட்­டி­ய­லிட வேண்­டும்.தற்­போது, சமூக வலை­த­ளங்­கள் வாயி­லான, கூட்டு முத­லீட்டு திட்­டங்­களில், இந்த எண்­ணிக்­கையை விட அதி­க­மா­னோ­ரி­டம் நிதி திரட்­டப்­ப­டு­கிறது.இந்த கூட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­களை கட்­டுப்­ப­டுத்த, எந்த அமைப்­பும் இல்லை. மேலும், இவை திரட்­டும் முத­லீ­டு­கள் குறித்த விப­ரங்­களும், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’க்கு தெரி­ய­வ­ரு­வ­தில்லை.இத்­த­கைய அம்­சங்­களை கருதி, ‘கிர­வுட் பண்டு’ நிறு­வ­னங்­க­ளுக்கு, இந்­திய நிறு­வ­னங்­கள் சட்­டத்­தின், 42வது பிரி­வில் இருந்து விலக்கு அளித்து, ‘செபி’யின் சட்ட விதி­களின் கீழ் கொண்டு வர, மத்­திய அரசு பரி­சீ­லித்து வரு­கிறது. இத­னால், கூட்டு முத­லீட்டு நடை­முறை, அமைப்பு சார்ந்­த­தாக மாறும். அதிக நம்­ப­கத்­தன்மை கார­ண­மாக, முத­லீ­டு­கள் அதி­க­ரிக்­கும். இதன் மூலம், புது­மை­யான திட்­டங்­கள் கைவ­சம் இருந்­தும், முத­லீ­டின்றி தவிக்­கும், ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்­கள் வளர்ச்சி காணும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
முதன் முறையாகஇந்­தி­யா­வில், முதன் முறை­யாக, 1976ல், ‘கிர­வுட் பண்டு’ முறை­யில் தயா­ரிக்­கப்­பட்ட படம், மன்­தன். தேசிய விருது பெற்ற இத்­தி­ரைப்­ப­டத்தை, ஷியாம் பென­கல் இயக்­கி­னார். இதை தயா­ரிக்க, குஜ­ராத் கூட்­டு­றவு பால் சந்­தைப்­ப­டுத்­து­வோர் கூட்­ட­மைப்­பைச் சேர்ந்த, ஐந்து லட்­சம் விவ­சா­யி­கள்,தலா, இரண்டு ரூபாய் வழங்­கி­னர்.

மூலக்கதை