மல்லையா வழக்கு டிசம்பர் 4ல் தொடங்குகிறது

தினகரன்  தினகரன்

லண்டன்: மல்லையாவை நாடுகடத்த கோரிய வழக்கு விசாரணை அடுத்த மாதம் 4ம் தேதி தொடங்கி 8 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, தனது நிறுவனத்துக்காக பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இவற்றை திருப்பி செலுத்தாத மல்லையா, கடந்த மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச்சென்றார். வங்கி கடன் மோசடி உட்பட பல்வேறு வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன. அவரை நாடு கடத்த மத்திய அரசு இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்தியா புகாரின்படி கைது செய்யப்பட்ட மல்லையா உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடக்கிறது. இதில் மல்லையா நேற்று ஆஜரானார்.  இதை தொடர்ந்து, மல்லையாவை நாடுகடத்த கோரும் வழக்கில் அடுத்த மாதம் 4ம் தேதி முதல் (8ம் தேதி நீங்கலாக) 14ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. அப்போது இங்கிலாந்தில் கிரவுன் பிரசிகியூஷன் சேவை நிறுவனம் இந்தியா சார்பாக ஆஜராக உள்ளது. நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை. இது நீதிமன்றத்தில் நிரூபணமாகும் என்றார்.

மூலக்கதை