வெங்காயத்துக்கு கட்டுப்பாடு மீண்டும் வருகிறது

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளது. வெங்காயம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.180 வரை அதிகரித்துள்ளது. பெல்லாரி வெங்காயம் எனப்படும் பெரிய வெங்காயம் கிலோ ரூ.65 வரை விற்கப்படுகிறது. விளைச்சல் பாதிப்படைந்துள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்வதால் உள்நாட்டில் சந்தைக்கு வரத்து வெகுவாக சரிந்துள்ளது. 2015ம் ஆண்டு வெங்காயம் விலை உச்சத்தை தொட்டபோது குறைந்த பட்ச ஏற்றுமதி விலை நிர்ணயிக்கப்பட்டது. இதுபோல் இந்த ஆண்டும் டன்னுக்கு 700 அல்லது 800 டாலர் (சுமார் ரூ.45,500 அல்லது ரூ.52,000) நிர்ணயிக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை