கறிக்கோழி கிலோ ரூ.120 ஆனது

தினகரன்  தினகரன்

கோவை: கறிக்கோழி சில்லரை விற்பனை விலை கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.170 வரை விற்பனையானது. கடந்த 17ம் தேதி முதல் கார்த்திகை மாதம் துவங்கியதால், சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் விரதமிருப்பதால், இறைச்சி நுகர்வு வெகுவாக குறைந்தது. இதனால், கடந்த 4 நாட்களாக விற்பனை குறைந்து வந்ததால், விலை வீழ்ச்சியடைந்து வந்தது. கடந்த 17ம் தேதி ரூ.145க்கும், 18ம் தேதி ரூ.140க்கும், 19ம் தேதி ரூ.130க்கும், நேற்று ரூ.120க்கும் வீழ்ச்சியடைந்தது. இது கடந்த 4 நாட்களுக்கு முன்பை விட ரூ.40 முதல் ரூ.50 வரை குறைவாகும். இதே போல் மீன் விற்பனையும், விலையும் சரிந்துள்ளது. வரும் நாட்களில் விரதமிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளதால், கறிக்கோழி, மீன் ஆகியவற்றின் விலை மேலும் குறையும் என்கின்றனர் வியாபாரிகள்.

மூலக்கதை