முட்டை விலை 40 சதவீதம் உயர்வு ரூ.7.50க்கு விற்பதால் மக்கள் அவதி

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : தேசிய தலைநகரில் கோழி முட்டை விலை 40 சதவீதம் வரை உயர்ந்து ரூ.7 முதல் 7.50 வரை விற்கப்பட்டு வருகிறது. இது பொது மக்களை, குறிப்பாக ஏழை எளியவர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி தலைநகர் டெல்லியிலும் முட்டையின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அசைவ உணவு பிரியர்கள், அவர்களது தினசரி உணவில் சத்துகள் மிகுந்த முட்டையை சேர்க்க தவறுவதில்லை. குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும், சைவ பிரியர்கள் உள்பட முட்டையை விரும்பி ஆம்லெட், போன்ற பல வகையில் சாப்பிட்டு வருகின்றனர்.  ஆனால், சில தினங்களுக்கு முன்பு ₹4-5க்குகீழ் விற்கப்பட்டு வந்த கோழி முட்டைகள் இப்போது 40 சதவீதம் வரை உயர்ந்து ₹7 முதல் ₹7.50 வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலை நாடு முழுவதும் நிலவுகிறது. இந்திய கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பேரவைத் தலைவர் ரமேஷ் கத்ரி கூறும் காரணங்கள் வருமாறு.: நாடு முழுவதும் முட்டை உற்பத்தி சரிந்துள்ளதால் அதன் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. டெல்லியில் முட்டை ஒன்றின் விலை ₹7.50 ஆக விற்பனையாகிறது. மற்ற நகரங்களிலும் முட்டை விலை அதிகமாகவே உள்ளது. முட்டை உற்பத்தி 30 சதவீதம் வரை குறைந்துள்ளதே, அதன் விலை உயர்வுக்குக் காரணமாகும்..கடந்த 2015-16ம் ஆண்டில் முட்டை உற்பத்தி 8,300 கோடியாக இருந்தது. 2016-17ம் ஆண்டில் இதைவிட கூடுதலாக உற்பத்தி இருந்தது. கடந்த ஆண்டில் முட்டை உற்பத்தி அதிகரித்து விலை மிக குறைந்தது. முட்டை உற்பத்தி செலவு ரூ3.50 ஆக இருந்த நிலையில்,  உற்பத்தி விலைக்கே விற்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள்   தள்ளப்பட்டோம்.. இதனால் பலர் பண்ணைகளை மூடி விட்டனர். இதனால் சில மாதங்களாகவே முட்டை உற்பத்தி கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாகவே முட்டை விலை உயர்ந்து வருகிறது. அடுத்த சில மாதங்களுக்கு உற்பத்தி உயர வாய்ப்பில்லை. எனவே முட்டை விலையும் உடனடியாக குறையாது. இவ்வாறு அவர் கூறினார்.உயரும் ஆம்லெட் விலைமுட்டை  விலை உயர்வால், ஓட்டல்களில் முட்டை சார்ந்த உணவு வகைகளின் விலை  உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம்லெட், ஆப்பாயில், முட்டை  ரோஸ்ட் போன்றவற்றின் விலை கணிசமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

மூலக்கதை